search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி நிறைவு விழா"

    • அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் நடந்தது
    • அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் 99- வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா மழையின் காரணமாக விமான தளத்தின் உள் அரங்கில் நடைபெற்றது.

    விழாவுக்கு அரக்கோணம் ஐ. என். எஸ். ராஜாளி கடற்படை அதிகாரி வினோத்குமார் பார்வையிட்டார் .

    சிறப்பு விருந்தினராக கோவா கடற்படை அதிகாரி விக்ரம் மேனன் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார் .

    அதனைத் தொடர்ந்து பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்ட வீர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அனைத்து துறைகளிலும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட சதீஷ் ராஜ் பிரதீர்க்கு கேரள சுழற் கோப்பை வழங்கினர்.

    இப்பயிற்சி 21 வாரங்களாக நடந்தது. இதில் துப்பாக்கி சுடுதல் ஹெலிகாப்டர் பராமரித்தல் இயக்குதல் தரை மற்றும் கடற் பகுதியில் சிறப்பாக இயக்குவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    விழாவில் ஐ என் எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தின் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு முதன்மைக் கவாத்துப் போதகர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார்.
    • சிறப்பு விருந்தினராக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அபின் தினேஷ் மோடக் கலந்து கொண்டார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில், பயிற்சி முடித்த 183 ஆண் காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.

    விழாவுக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், பயிற்சி பள்ளி முதல்வருமான சீபாஸ் கல்யாண் தலைமை தாங்கினார். திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் அனுமந்தன் முன்னிலை வகித்தார்.

    இந்த விழாவிற்கு முதன்மைக் கவாத்துப் போதகர் ஜோசப் செல்வராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனர் அபின் தினேஷ் மோடக் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பயிற்சியில் கவாத்து, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய காவலர்களுக்குச் சான்றிதழ், பதக்கங்கள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பயிற்சி முடித்து காவல் பணியில் ஈடுபட போகும் உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. உங்களை பார்க்கும்போது எனது பயிற்சி காலம் எனக்கு நினைவுக்கு வருகிறது. இப்போது உங்களது குடும்பத்தினர் உங்களை ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

    இந்தப் பயிற்சி காலங்களில் நீங்கள் கற்றுக்கொண்டவை ஏராளம். நான் பொறியியல் பட்டதாரி. தற்போது காவல்துறையில் உயர்ந்த பதவியில் உள்ளேன். அதேபோல் தற்போது இந்த பயிற்சியில் 83 பொறியாளர்கள் காவல் பயிற்சி பெற்றுள்ளீர்கள். நீங்கள் இத்துறையில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு முன்னேறுங்கள். தற்போது உங்களுக்கு பொறுப்புகள் அதிகம் உள்ளது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். பணியின் போது, மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பயிற்சி முடித்த காவலர்களின் வீர சாகச, அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

    முடிவில் காவலர் பயிற்சி பள்ளியின் முதன்மை சட்ட போதகர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.

    இதேபோல் திருவள்ளுவர் அடுத்த கனகவல்லிபுரம் பகுதியில் செயல்படும் காவலர் பயிற்சி பள்ளியில் 432 பெண்

    காவலர்களுக்குப் பயிற்சி நிறைவு விழா நடந்தது.

    விழாவுக்கு காவல்துறை தலைவர் (பொது) ராதிகா கலந்து கொண்டு பயிற்சியின்போது கவாத்து, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் சிறந்து விளங்கிய பெண் காவலர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தி பேசினார்.

    • இன்று மாலை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது
    • பயிற்சி பள்ளியின் முதல்வராக கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் இருந்து வருகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான பயிற்சி மறவன்குடியிருப்பு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் தேர்ச்சி பெற்ற 199 காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

    பயிற்சி பள்ளியின் முதல்வராக கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், துணை முதல்வராக ஆயுதப்படை துணை சூப்பிரண்டு சேம் வேதமாணிக்கம் ஆகியோர் இருந்து வருகிறார்கள். பயிற்சி காவலர்களுக்கு சிறந்த முறையில் சட்ட வகுப்புகள் மற்றும் கவாத்து பயிற்சி சிறப்பான முறையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

    பயிற்சி காவலர்களின் நிறைவு விழா இன்று (19-ந் தேதி) மாலை 3.30 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் பங்கேற்று பயிற்சி காவல்களின் கவாத்து அணிவகுப்பினை பார்வையிடுகிறார்.

    பயிற்சி காவலர்கள் தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட கொடி அங்கீகார லோகோவை தங்கள் சீருடையில் அணிந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளார்கள்.

    மேலும் சிறந்த முறையில் கவாத்து, சட்டப் பயிற்சி, துப்பாக்கி சுடுதல் போன்ற நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு காவல்துறை தலைவர் பதக்கங்களை வழங்குகிறார். நிறைவு விழாவில் பயிற்சி காவலர்களின் களரி, கராத்தே நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×